சுற்றுலா தொடர்பான சேவை வழங்குநர்களின் திறன் விருத்திக்கான பயிற்சி நெறி எதிர்வரும் 22 ஆம் திகதி புதன்கிழமையும், 23 ஆம் திகதி வியாழக்கிழமையும் நெடுந்தீவு பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி நெறி இரு நாள்களும் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவுப் பிரதேச சுற்றுலா சார்பான முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள், சிறிய மற்றும் பெரிய பேருந்து ஓட்டுநர்கள், சுற்றுலா சார் கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், சுற்றுலாதுறை சார் விடுதிகள், உணவகளின் உரிமையாளர்கள், கடல்சார் விளையாட்டுக்கள் மற்றும் படகுச் சேவை வழங்குநர்கள் இந்தப் பயிற்சி நெறியில் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சிநெறியில் முழுமையாகப் பங்குபற்றுபவர்களுக்கு வடமாகாண சுற்றுலா பணியகத்தின் அடையாள அட்டை மற்றும் ‘Tourist Friendly Service” ஸ்ரிக்கர்களும் வழங்கப்படவுள்ளன.
பயிற்சி நெறியில் பங்குபற்ற ஆர்வம் உடையவர்கள் தங்கள் பெயர் விபரங்களை எதிர்வரும் 20 ஆம் திகதி பகல் 12 .00 மணிக்கு முன்னதாக தங்களின் கிராம உத்தியோகத்தரிடம் பதிவு செய்ய முடியும் என்றும் அல்லது வடமாகாண சுற்றுலாப் பணியகத்தின் விளம்பரத்தில் உள்ள தொடர்பிலக்கத்துக்கு விவரங்களை வழங்க முடியும் என்றும் நெடுந்தீவு பிரதேச செயலர் அறிவித்துள்ளார்.