குளியாபிட்டி நகர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக குளியாபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, குளியாபிட்டி நகர் எல்லை, கஹதுல்ல, பஹல வீரஒவ, சேனாதிகம மற்றும் துன்மோதர ஆகிய பகுதிகளுக்கு பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த பகுதியில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள பின்னணியிலேயே, இந்த பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளாக குளியாபிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நிலைமை மேலும் வலுவடையுமாக இருந்தால், கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சுகாதார பிரிவு குறிப்பிடுகின்றது.
இது இவ்வாறு இருக்க குருநாகல் மாவட்டத்தின் குளியாபிட்டிய பொலிஸ் பிரிவு, இன்று நள்ளிரவு முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குளியாபிட்டிய பகுதியில் இதுவரை 520 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.