அவதானத்துடன் செயற்படவும்
இலங்கையின் சில பகுதிகளில் இன்றையதினம் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், முல்லைதீவு, கிளிநொச்சி, பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இவ்வாறு மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தின் தாழ்வு நிலப் பகுதிகளிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது