நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய திறைச்சேரியின் செயலாளர் செயற்பட வேண்டும், இல்லாவிடின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு அமைய சிறை செல்ல நேரிடும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (மார்ச் 8) நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் பொருளாதார ரீதியில் தன்னிச்சையாக முன்னேற்றமடையும் திறன் கொண்டவர்கள் என்று குறிப்பிட்டுள்ள அவர், அரசாங்கத்தின் தவறான தீர்மானங்களால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயம், கால்நடை அபிவிருத்தி மற்றும் மீன்பிடி கைத்தொழில் ஆகிய துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் செயற்பாட்டினையே அவர் முன்னெடுக்கின்றார். யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் இனிவரும் காலங்களில் இவ்வாறானவர்களை இனங்கண்டு விரட்டியடிக்க வேண்டும் என்றும் சாணக்கியன் தெரிவித்தார்.