சிறுவர்கள் மத்தியில் இன்புளுவென்சா வைரஸ் தொற்றுத் தீவிரம் பெற்றுள்ளது என்று தெரிவித்த லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் திபால் பெரேரா, காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் சிறுவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது-
அதிக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் சுவாசப் பிரச்சினைகளால் சிறுவர்கள் பாதிக்கப்படலாம்.
பிள்ளைகளுக்கு காய்ச்சல், இருமல், தலைவலி, சுவாசப் பிரச்சினைகள் காணப்பட்டால் அவர்களைப் பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருப்பது சிறந்தது.
தற்போது ஏற்படக்கூடிய காய்ச்சல் விரைவாக ஏனையோருக்குப் பரவும் தன்மை கொண்டாத உள்ளதால், வீட்டில் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவது சிறந்தது. – என்றார்.