இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணயநிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக்கொண்டு வந்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனும்சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனும் இணக்கம் காணப்பட்டவிடயங்களும், உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பு தொடர்பானஉடன்படிக்கையில் அடங்கியுள்ள விடயங்களும், சர்வதேச நாணய நிதியநிபந்தனைகளுக்கு அமைவானது என்பதனை அவர்கள்உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களுடன்தொடர்புடைய கடன் இலக்குகள், இணக்கப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள்என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு அமைவாக, சர்வதேசஇறையாண்மை முறிகளை மறுசீரமைப்பதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாகநிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.