நாட்டின் சனத்தொகை மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை போன்றகாரணிகளின் அடிப்படையில் மாத்திரமே புதிய மதுபான அனுமதிப்பத்திரங்கள்வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியதெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மதுபானம் உற்பத்திச் செய்ததைக் கட்டுப்படுத்துவதும்அரசாங்கத்தின் நோக்கமாகும். மேலும், குறிப்பிட்ட பகுதிக்கு மதுபான உரிமம்வழங்கினால், பிரதேச செயலாளர் மற்றும் பொலிசாரின் கருத்தை கட்டாயம்கேட்க வேண்டும். நியாயமான ஆட்சேபனைகள் எழும் போது எந்த நேரத்திலும்அந்தப் பகுதிகளுக்கு மதுபான உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்கமாட்டோம்.
ஒருபோதும் மதுவின் சட்டப்பூர்வ பயன்பாட்டை அரசு அதிகரிக்கப்போவதில்லை. அரசு தனது நண்பர்களுக்கு மதுபான உரிமம் வழங்குவதாககூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம். தற்போது வரை, நாட்டிலுள்ளமதுபான நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஆர்.பி. 04 உரிமம் வெளியிடும் போதுமுதற்கட்ட கட்டணம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றாலும், தற்போதுஒன்றரை கோடி ரூபாய் (15 மில்லியன்) கட்டணமாக வசூலிக்கின்றது.
அனைத்து மதுபான அனுமதிப்பத்திரங்களுக்கும் அறவிடப்படும் வருடாந்தகட்டணம் பத்து மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாகசட்டவிரோத மதுபானத்தின் வளர்ச்சியை குறைப்பதற்கும் சட்டப்பூர்வ மதுபாவனையை குறைப்பதற்கும் அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர்குறிப்பிட்டார்