சதொச விற்பனை நிலையங்களில் உணவுப்பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

SUB EDITOR
1 Min Read

லங்கா சதோச நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பல முக்கிய நுகர்வோர் பொருட்களின் விலைகள் நேற்று (ஜனவரி 22) முதல் குறைக்கப்பட்டுள்ளன.

இந்த விலை குறைப்புகள், வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. குறைந்த விலையில் வழங்கப்படும் பொருட்கள் நாட்டிலுள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • நிலக்கடலை: ஒரு கிலோ ரூ.100 குறைவில், புதிய விலை ரூ.995
  • சிவப்பு சீனி: ஒரு கிலோ ரூ.40 குறைவில், புதிய விலை ரூ.300
  • உருளைக்கிழங்கு (இறக்குமதி): ஒரு கிலோ ரூ.30 குறைவில், புதிய விலை ரூ.180
  • சிவப்பு கௌப்பு: ஒரு கிலோ ரூ.30 குறைவில், புதிய விலை ரூ.765
  • நெத்திலி: ஒரு கிலோ ரூ.20 குறைவில், புதிய விலை ரூ.940
  • காய்ந்த மிளகாய்: ஒரு கிலோ ரூ.15 குறைவில், புதிய விலை ரூ.830
  • பாஸ்மதி அரிசி: ஒரு கிலோ ரூ.10 குறைவில், புதிய விலை ரூ.645
  • பெரிய வெங்காயம் (இறக்குமதி): ஒரு கிலோ ரூ.10 குறைவில், புதிய விலை ரூ.230
  • பருப்பு: ஒரு கிலோ ரூ.2 குறைவில், புதிய விலை ரூ.288
  • வெள்ளை சீனி: ஒரு கிலோ ரூ.2 குறைவில், புதிய விலை ரூ.240
Share this Article
Exit mobile version