கொழும்பு துறைமுக நகரத்தில் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனம், 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் தலைவர் பாய் யின்சானுடன் பீய்ஜிங்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று (ஜூன் 26) திங்கட்கிழமை சந்திப்பொன்றை நடத்திய நிலையில் இந்த முதலீடு குறித்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் தலைவரையும் சந்தித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய கடன் மறுசீரமைப்பு செயல்முறையுடன் முன்னோக்கி செல்லும் வழி தொடர்பில் இதன்போது விவாதிக்கப்பட்டதாக சப்ரி குறிப்பிட்டுள்ளார்.