இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
அதன்படி, 1015 பேர் இதுவரை கொவிட் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று (18) மாத்திரம் 2,478 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதற்கமைய இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 147,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,516 பேர் நேற்று (18) பூரணமாக குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 121,145 ஆக அதிகரித்துள்ளது.