கைக்கடிகாரங்களில் போதைப்பொருள் பொதிகளை மறைத்து கொண்டு செல்லும் போதைப்பொருள் வியாபாரிகளின் புதிய முறை ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
மொரகஹஹேன பொலிஸ் பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இது தொடர்பில் அறியக்கிடைத்ததாகவும், இவ்வாறு போதைப்பொருளை கடத்த முற்பட்ட சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்த்துள்ளதாகவும் மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரகஹஹேன – ஒலுபொடுவ பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் போது போதைப்பொருள் பொதிகளை கொண்டு செல்லும் முறையினை வெளிப்படுத்தியதாகவும் பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
மேலும் சந்தேக நபர் ஹெரோயின் பொதிகளை கொண்டு செல்வதாக மொரகஹஹேன பொலிஸ் நிலையதிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது போதைப்பொருள் பொதிகள் கண்டுபிடிக்கபட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில், சந்தேக நபர் 33 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகத்திற்கு இடமின்றி பல்வேறு பகுதிகளுக்கு போதைப்பொருள் பொதிகளை விநியோகித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் ஹொரணை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என பொலிஸார் கூறியுள்ளனர்.