நெடுந்தீவில் இருந்து கடும் காற்றின் மத்தியில் பல்வேறு துன்ப துயரங்களுடன் சிறுவர் முதல் முதியவர்கள் வரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடற்பயணம் மேற்கொண்டு குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தினை வந்தடைகின்றனர்.
இன்றைய தினம் (மே – 25) காலையில் நெடுந்தாரகை படகு காற்று காரணமாக சேவையில் ஈடுபடமுடியாத சந்தர்ப்பம் ஏற்பட்ட போது, ஒரு மணி நேரத்தின் பின் காளிகாம்பாள் படகு தாங்களாக முன்வந்து பிராயணிகளை ஏற்றிச் செனறது.
சுமார் ஒரு மணி நேர பயணத்தில் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தினை அண்மித்த போது, குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் அணைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஏற்றும் படகு குறித்த பயணிகள் படகினை அணைப்பதற்கு இடம் கொடுக்காமையினால், குறிப்பிட்ட நேரம் கடலில் வட்டமிட்டு பின்னரே அணைத்துக் கொள்ளப்பட்டது.
இவ்விடயம் இன்று நேற்று அல்ல நெடுங்காலமாக இடம் பெற்று வருகின்றது இது தொடர்பாக பாலத்தில் அணைக்கப்பட்டிருக்கின்ற படகினை சார்ந்தவர்களும் கவனத்தில் கொள்ள வேண்டும என்பதுடன், உரிய திணைக்களங்களும் இதற்கான சரியான பொறிமுறைகளை ஏற்படு;த்தி இடையூறு அல்லாத நெடுந்தீவு போக்குவரத்தினை வழங்க முன்வரவேண்டும்.