நெடுந்தீவு பிரதேச சபையின் பொறுப்பில் கண்காணிக்கப்படும் நெடுந்தாரகைப் படகின்ற செலவினங்கள் அதிகமாக காணப்படுவதனைக் காரணம் காட்டி நெடுந்தீவு இறங்கு துறைமுகத்தில் நீண்ட நாட்களாக தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த புரவிபுயலின் பின்னர் படகுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் கௌரவ கடற்தொழில் துறை அமைச்சர் திரு.கே.என்.டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சியால் கடந்த வாரம் சேவையினை ஆரம்பித்தது ஆயினும் சிறு பழுது காரணமாக சேவையினை தொடர முடியவில்லை அதே நேரம் குமுதினிப் படகு திருத்தம் செய்யப்பட்டு 03 நேரம் சேவையில் ஈடுபட்டு வருகின்றது.
குமுதினிப்படகு ஞர்யிற்றுக்கிழமை தவிர்ந்த ஏனைய நாட்களில் 03 சேவையினை வழங்கி வருகின்றது. ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஏனைய நாட்களில் குமுதினிப்படகு சேவை இடம் பெறாத சந்தர்ப்பத்தில் நெடுந்தாரனை மக்கள் போக்குது சேவையில் இரண்டு நேர சேவையாக இடம் பெறும்
ஆந்த வகையில் இன்று காலை 07.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்பட்டு பின்னர் 09.30 மணிக்கு குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது அதன் பின்னர் மாலை 02.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்த புறப்பட்டு மாலை 04.30 மணிக்கு குறிகட்டுவானில் இருந்து புறப்பட்டது,