குடிநீர் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிருங்கள்.

SUB EDITOR
0 Min Read

குடிநீர் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதையும் தவிர்க்குமாறு சுகாதாரத்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் போத்தல்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் போது, அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட சில மூலப்பொருட்கள் நீருடன் கலந்து விடும் என்று உணவு பாதுகாப்பு பிரிவு எச்சரித்துள்ளது.

சில இரசாயனங்கள் புற்றுநோய் உண்டாக்கும் என்பதையும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால், குடிநீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

சிலர் நீரை சேமிக்க இது போன்ற பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதாகவும், இது ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் என சுகாதாரத் துறையின் உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article
Exit mobile version