இலங்கைக்கு மேல் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு நிலைமை, குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழந்து, இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதிகளுக்கு இன்று காலை நகர ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் இருந்து காற்றழுத்தத் தாழ்வு நிலைமை விலகிச் சென்றவதால், மழையுடனான காலநிலை இன்று மாலை முதல் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களில் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படலாம்.
நாடு முழுவதும் இடையிடையே மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எதிர்வு கூறப்படுகின்றது.