ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் நேற்று (பெப் 12) கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் விமர்சையாக நடைபெற்றன.
நிகழ்வின் தொடக்கமாக விருந்தினர்கள் அழைக்கப்பட்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, அணிநடை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சுவட்டு நிகழ்வுகள் மற்றும் பிற போட்டிகள் சிறப்பாக நடைபெற்றன.
கல்லூரி முதல்வர் எம். அன்ரன் அமலதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு விழாவில், பிரதம அதிதியாக தீவக கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் செல்லையா இளங்கோ, சிறப்பு விருந்தினராக மரியதாஸ் டினோசன், மற்றும் கௌரவ விருந்தினராக ஊர்காவற்துறை மக்கள் வங்கியின் முகாமையாளர் திருமதி சசிகலா கவீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அத்துடன், ஆசிரியர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் நிகழ்வில் உற்சாகமாக கலந்துகொண்டனர்.