எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 18) முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இ.தொ.க. தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நுவரெலியாமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரன் ஆகியோர் இணைந்துஇதனை அறிவித்தனர்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதற்காக நேற்று கொட்டகலையில் அமைந்துள்ளசீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் தேசிய சபை கூடியது.
இதன்போது, ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. தேசிய சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டது. அதன்பின்னரே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய சபை கூட்டம் முடிவடைந்த பின்பே தேசிய சபையில் எடுக்கப்பட்டமேற்படி முடிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைகள் இதனைஅறிவித்தனர்.