இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் “உயர்த்தும் கரங்கள்” செயற்திட்டத்தின் ஊடாக “புதிய மகாஜனன் இளைஞர்கள் ரொரன்டோ கனடா” அமைப்பின் நிதியில் இளவாலை மற்றும் கீரிமலை பகுதிகளை சேர்ந்த 75 மாணவர்களுக்கு புத்தகப்பைகள், கற்றல் உபகரணங்கள் மற்றும் புதிய வங்கி கணக்கும் ஆரம்பிக்கபட்டு கையளிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கபட்ட இந்தச் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் 500 ரூபா பணம் வங்கியில் வைப்பிலிடப்பட்டு தலா 3 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.
ஆண்டுதோறும் இந்த மாணவர்களுக்கு இந்த அமைப்பினூடாக நிதி வைப்பிலிடப்படவுள்ளதுடன், மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு துறையின் சிறப்பு பெறுபேறுகளுக்கு அமையவும் நிதி வைப்பிலிடப்படவுள்ளது.
உயர்த்தும் கரங்கள் திட்டத்தின்கீழ் மேலும் கொல்லங்கலட்டி, பன்னாலை பகுதிகளைச் சேர்ந்த 85 மாணவர்களுக்கும், தெல்லிப்பழை, மாவிட்டபுரம் பகுதிகளை சேர்ந்த 85 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களும் சேமிப்பு நிதியும் வழங்கபடவுள்ளது.