இலங்கை அரசியல் வரலாற்றில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கதலைமையிலான தேசிய மக்கள் சக்தி கட்சி பாரிய வெற்றியை பதிவுசெய்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தனிக்கட்சியான 2/3 என்ற பெரும்பான்மையை தேசியமக்கள் சக்தி பெற்றுள்ளது.
விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் ஒரு தனிக் கட்சி இதைப் பெறுவதுஇதுவே முதல் முறையாகும்.
இந்த வெற்றியின் மூலம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கும் எந்தவொருபிரேரணை மற்றும் சட்டங்கள் எந்தவொரு கட்சியின் ஆதரவின்றி நிறைவேற்றமுடியும்.
இலங்கை முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில்மட்டும் தேசிய மக்கள் சக்தி இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.
இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 123 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி 31 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுகட்சி 6 ஆசனங்களை, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களையும், ஸ்ரீலங்காபொதுஜன பெரமுன 2 ஆசனங்களை, முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும்பெற்றுள்ளது