இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு ஆதரவு வழங்கப்படும் என்று சர்வதேச நாணய நிதியத்துக்கு சீனா உறுதி வழங்கியுள்ளது.
அதையடுத்து சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை பெறவிருந்த 2.9 பில்லியன் டொலர் கடனுக்கான தடை நீங்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
ப்ளூம்பெர்க் செய்தியின்படி மார்ச் மாதம் 6ஆம் திகதி சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கி மூலம் கடன் மறுசீரமைப்புக்கு சீனா எழுத்து மூலமான ஆதரவை வழங்கியுள்ளது.
சீனாவின் ஏற்றுமதி – இறக்குமதி வங்கியின் கடிதம் சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்று ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.