28.11.2024 வியாழக்கிழமை காலை 8.00 மணி வானிலை அவதானிப்பு.
வங்காள விரிகுடாவில் கடந்த 23.11.2024 ல் தோற்றம் பெற்ற காற்றழுத்த தாழ்வுநிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ( புயலுக்குரிய ஏது நிலைகளைப்பெற்று விட்டது) முல்லைத்தீவிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 215 கி.மீ. தொலைவில் காணப்படுகின்றது.
இதன் நகரும் வேகம் மிக மிக குறைவாகவே உள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் மணிக்கு 3 கி.மீ. வேகத்தில் நகர்கிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனிலை ரீதியாக தற்போது ஒரு விதஅமைதி நிலவுகின்றது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுவேகத்தை கணக்கிட்டால் இந்த அமைதி நிலையற்றது என்றே தோன்றுகின்றது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று இடையிடையே சற்று கன மழைகிடைக்கும்( உண்மையில் இது சற்று ஆறுதலான விடயம் ஏனெனில் இந்த மழைஇடைவெளி பல இடங்களில் வெள்ள நீர் வடிந்து கடலைச் சென்றடைவதற்கானவாய்ப்பான காலம்).
ஆனால் நாளையும் அதாவது 29.11.2024 ( இன்று இரவு முதலே) மற்றும் நாளைமறுதினமும்(30.11.2024) வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் கன மழைகிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது வடக்கு மாகாணத்தில் காற்றின் வேகம் சற்று அதிகரித்துள்ளது. இதுஎதிர்வரும் 30.11.2024 வரை தொடரும்.
இன்று காலை நிலவரப்படி பல குளங்களின் நீர் கொள்ளளவு மிக உச்ச நிலையைஎட்டியுள்ளது. எனவே அக்குளங்களின் கீழுள்ள மக்கள் அவதானமாக இருப்பதுஅவசியம். இன்று குறைவான மழை கிடைக்கும் என்பது குளங்களுக்கு வருகின்றநீரின் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆறுதலான விடயம்.