ஆகஸ்ட் 26 அன்னை தெரேசா பிறந்தநாள் இன்று
அன்பு என்றால் அன்னை தெரேசா
(26.08.1910–05.09.1997)
அன்னை தெரேசா (Mother தெரசா) அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.
1950 ஆம் ஆண்டு, இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர். முதலில் இந்தியா முழுவதும் பின்னர் வெளிநாடுகளுக்கும் பிறர் அன்பின் பணியாளர் சபையினை நிறுவினார்.
இந்தியாவில் அவர் ஆற்றிய சேவைக்காக இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா விருதளித்து பெருமைப் படுத்தியது. மேலும் அமைதிக்கான நோபல் பரிசும் பெற்றிருக்கிறார்.