சிறுவர்கள் மரங்களை வளர்க்கும் ஊக்குவிப்பு வேலைத்திட்டம் – 2020 -2021
அமரர் இராமாசிப்பிள்ளை ஞாபகர்த்தமாக தரம் 5ற்கு உட்பட்ட மாணவர்களுக்கான மரக்கன்று விநியோகத்தை தொடர்ந்து ஊக்குவிப்பு கொடுப்பனவாக ரூபா 500.00 பயனாளி மாணவர்களுக்கு திரு. கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது.
கடந்த வருடம் திரு.கண்ணன் அவா்களின் முயற்சியினால் தரம் 01 முதல் தரம் 05 வரையான மாணவா்களுக்கு தென்னம் கன்றும் வேப்பம் கன்றும் வழங்கப்பட்டது. அதனை ஊக்குவிக்கும் முகமாக இன்றைய தினம் இவ் ஊக்குவிப்பு தொகை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வு இன்று (ஏப்ரல் 19) நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மதிப்புக்குரிய எவ்.சி. சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திரு. T. கென்ஸ்மன் அவர்களும் பிரதேச செயலக நிதி உதவியாளர் திருமதி. S. நாகநந்தினி, மற்றும் கிராம அலுவலர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நெடுந்தீவின் காலமாற்றங்கள் மற்றும் எதிா்கால சந்ததியினரது தேவையறிந்து தற்காலத்தில் மேற்கொள்ளப்படும் இவரது முயற்சிகள் பாரட்டத்தக்கது. தற்போதைய கொரோனா வைரஸ் தாக்கங்களின் மத்தியிலும் நெடுந்தீவிற்கு வருகை தந்து முன்னின்று அவா் செயற்படுத்தி வருகின்ற செயற்பாடுகள் போற்றுதற்குாியது