யா.நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் 75வது ஆண்டு பவள விழா கொண்டாடுவதற்கான ஏற்பாட்டுக்குழு நேற்றைய தினம் (பெப்ரவாி 18) பாடசாலை அதிபர் தலiமையில் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. இவ்வருடம் ஜனவரி மாதம் 17ம் திகதி பாடசாலையின் 75வது ஆண்டு விழா தினமாக காணப்பட்டபோதும், கொரோனா வைரஸ்; தாக்கத்தின் காரணமாக நிகழவினை நடாத்த முடியாத நிலமையேற்பட்டது. ஆயினும் நாட்டு நிலமைகளைக் கருத்திற் கொண்டு இவ்வருடத்தின் நடுப்பகுதியில் (ஆடி மாதத்தில்) விழா நடாத்துவதனைக் கருத்திற் கொண்டு குறிப்பிட்ட ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் பெற்றோர்களை மையப்படுத்தி வைரவிழா ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வைரவிழா குழு விபரம்:-
தலைவர் – திரு.ஏகாம்பரம் சச்சிதானந்தம் (அதிபர்)
செயலாளர் – திரு.அ.அருள் ஜீவன் (பழைய மாணவன்)
பொருளாளர் – திரு.கார்த்தீபன் (ஆசிரியர்)
ஒருங்கிணைப்பாளர் – திரு.கு.ஜனேந்திரன் (பழைய மாணவன்)
உபதலைவர் – திரு.த.லம்போதரன் (ஆசிரியர்)
உப செயலாளர் – திரு.பீ.பற்றிக் றொஷான் ; (பழைய மாணவன்)
நிர்வாக உறுப்பினர்கள்
1. திரு.ச.மரியதாஸ் குருஸ் (பிரதி அதிபர்)
2. திரு.அ.கொன்சியஸ் (பழைய மாணவன்)
3. திருமதி நி.கமலவேணி (ஆசிரியர்)
4. திரு.பி.ஞானராஜ் (பெற்றோர்)
5. திருமதி சு.ரேணுகா (ஆசிரியர்)
வைரவிழா ஏற்பாட்டுக்குழுவாக 11 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளதுடன், நெடுந்தீவு மற்றும் நெடுந்தீவிற்கு வெளியில் உள்ளவர்கள் புலம் தேசத்தில் வாழ்கின்ற பழைய மாணவர்களை ஒன்று சேர்க்கும் வட்சப்குறுப்பினை உருவாக்கி கொள்வதுடன் கொவிட் 19 நிலமைகளைக் கருத்திற் கொண்டு பிரதேச ரீதியாக கலந்துரையாடல்களை முன்னெடுத்து அனைவரையும் இணைத்து விழா சிறப்பாக மேற்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் திங்கட்கிழமை (பெப்ரவரி 22) நெடுந்தீவிலும், அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 26) யாழிலும் தொடர்ந்து கிளிநொச்சி வவுனியா பிரதேசங்களிலும் கலந்துரையடால்களை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளல்.
பாடசாலைகளினை அழகு படுத்துதல், 75வது ஆண்டு வைரவிழா நினைவு நூல் வெளியீடு செய்தல் 75வது ஆண்டு நிறைவு தினத்தினை சிறப்பிக்கும் கலை விழாவொன்றினை ஒழுங்கு செய்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
இக்குழு பொறுப்பேற்று அனைவரையும் ஒன்றிணைத்து நிகழ்வுகளினை முன்னெடுப்பது எனவும் இந்நிகழ்விற்கான மலர் வெளியீட்டுக்குழு ஒன்றினை உருவாக்கி கொள்வது எனவும தீர்மானிக்கப்பட்டது. அதற்கான குறிப்பிட்ட சிலரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டபோதும், அவர்களது சம்மதங்களை பெற்று எதிர்வரும் நாட்களில் நடைபெறும் கலந்துரையாடல்களில் அதனை அமைத்துக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.