கடந்த 5 மாதங்களில் மட்டும் இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 60 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளது என்று கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த இலாபத்தை எதிர்காலத்தில் மக்களுக்கு வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எரிபொருள்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்க்பபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இலாபத்தைப் பெறுவதற்கு பிரதான காரணம் கூட்டுத்தாபனத்தில் நிலவிய வினைத் திறன் இன்மை மற்றும் முறைகேடுகளைக் கண்டறிந்து நீக்கியமையே என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, எரிபொருள் விலைகள் அதிகளவில் உயர்த்தப்பட்டமையால் பொதுமக்கள் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.