வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் சுமார் 4km பகுதி முதற்கட்டமாக காப்பெற் இடப்படவுள்ளது.
யாழ் அராலி சந்தி தொடக்கம் வேலணை புங்குடுதீவு ஊடாக குறிகட்டுவான்வரையான வீதி புனரமைப்புக்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்ற நிலையில் வேலணை – புங்குடுதீவு இணைப்பு பாலம் முதற்கட்டமாக காப்பெற் இடப்படவுள்ளது.
அண்மையில் இலங்கை பாரளுமன்ற கூட்டத்தொடரில் கலந்துகொண்ட
நயினாதீவு ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி அதிவணக்கத்திற்குரியபதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரோ அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே முதற்கட்ட வீதி அபிவிருத்திக்கான அனுமதியினை கிடைத்துள்ளதாக தெரியவருகின்றது.
முதற்கட்ட வேலைகள் ஆரம்பித்தல் தொடர்பில் இன்றையதினம் (ஜூன்05) வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் குறித்த பகுதிக்கான அளவீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நாளை (ஜூன் 06) குறித்த பகுதி காப்பெற் இடும் வேலைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.