வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடசாலைக்கு ஒருவகைத் தீர்வாக UNICEF இன் அனுசரணையில் TWIN Classroom முறைமை
1. புதுக்குளம் மகா வித்தியாலயம்
2. நெடுங்கேணி மகா வித்தியாலயம்
3. ஓமந்தை மத்திய கல்லூரி
4. கனகராயன்குளம் மகா வித்தியாலயம்
ஆகிய நான்கு பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ளது.
பாடத்திற்கான ஆசிரியர்களை பாடசாலைகளிடையே Virtual ஆக பகிர்ந்து கொள்ளும் தொழிநுட்ப முறைமையே இதுவாகும்.
இதன் தொடக்க நிகழ்வாக கனகராயன்குளம் மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர்தர உயிரியல் பாடத்திற்கு ஆசிரியர் அற்ற நிலைமையை கருத்திற்கொண்டு புதுக்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் நேரடியாக தம் மாணவருக்கும், நிகழ்நிலை – மெய்நிகர் முறைமையில் கனகராயன்குளம் மகா வித்தியாலய மாணவர்களுக்கும் பாடத்தினை ஆரம்பித்துள்ளார்.
வலயத்தின் கணித, உயர்தர கணித விஞ்ஞானப் பிரிவுகளுக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் வாசுதீசன் அவர்களின் இணைப்புச்செயலாற்றுகையில் இரு பாடசாலைகளினதும் அதிபர், ஆசிரியர்கள் ஒத்துழைப்பில் இரு பாடசாலைகளினதும் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆசிரியர்களின் தொழிநுட்ப ஒத்துழைப்பில் இது சாத்தியமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.