35 முதல் 45 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களும் கர்ப்பப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயை கண்டறிவதற்காக தங்கள் சுகாதாரப் பகுதியில் உள்ள கிளினிக்குகளுக்குச் செல்லுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெண்களை தாக்கும் புற்றுநோய் தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
குடும்ப சுகாதார பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் பத்மக டி சில்வா தெரிவிக்கையில்,பெண்களிடையே மிகவும் பொதுவான புற்றுநோய்களாக கருதப்படுபவை கர்ப்பப்பை மற்றும் மார்பக புற்றுநோய்களாகும்.
எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு 35 முதல் 45 வயது வரையான பெண்கள் தமது பிரதேச கிளினிக்குகளுக்குச் சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.