திருகோணமலை – மூதூர் பகுதியில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஒருவருக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனையினை நீதிபதி இளம் செழியன் விதித்துள்ளார்.
இந்த சம்பவம் திருகோணமலை – மூதூர் பகுதியில் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட 3 சிறுமிகளில் இருவரின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளுக்கே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்ந்த நிலையில் சந்தேகநபருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நேற்று கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்