புதுக்குடியிருப்பு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்றைய தினம் (மே 26) புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான திரு காதர் மஸ்தான் தலைமையில் காலை 09.00 மணிக்கு இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்தால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் விசேடமாக கலந்து கொண்டனர்.
புதுக்குடியிருப்பு பிரதேச இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பின்வரும் விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டன.
●மன்னாகண்டலில் கமக்கார அமைப்பு நிறுவுதல் தொடர்பாகவும்,
●மன்னாகண்டலில் வனலாகா திணைக்களத்திடமிருக்கும் 500 ஏக்கர் காணி விடுவித்தால் தொடர்பிலும்,
●மன்னாகண்டலில் தனிநபரால் மேற்கொள்ளப்படும் அடாத்தான காணி அபகரிப்பு, அவற்றை பொலிஸில் பாரமரித்தமை தொடர்பிலும்,
●மூங்கிலாறு விவசாயக் காணி பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகவும்,
●புதுக்குடியிருப்பு மேற்கு மாற்று வலுவினருக்கான வியாபார நிலையம் விஸ்தரித்தல் தொடர்பிலும்,
●மாற்றுத்திறனாளிகளின் 05 ஏக்கர் பண்ணை செய்கை ஏற்பாடு தொடர்பிலும்,
●உடையார்கட்டு உப தபாலக காணி ஒதுக்குதல் தொடர்பாகவும்,
●மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாகவும்,
●பாடசாலை, அரச பேரூந்து ஆரம்பித்தல் தொடர்பிலும்,
●வாய்கால் பிரச்சினைகளால் வயல் பிரதேசங்கள் சேதமடைதல் தொடர்பிலும்,
●இடைநடுவில் கைவிடப்பட்ட நெற்கொள்வனவு தொடர்பிலும் சந்தைப்படுத்தல் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டது.
குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியம் வினோ நோகராதலிங்கம், பிரதேச செயலாளர் திரு சி.ஜெயகாந்த், உதவி பிரதேச செயலாளர் செல்வி.ம.சர்மிலி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் திரு எஸ் ஜெயந்தன், கல்வி திணைக்கள அதிகாரிகள், பிரதேச சபை அதிகாரிகள், பொறியியல் திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள், நில அளவை அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் பிரதேச சமூக அமைப்புக்கள், கிராம அமைப்புக்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.