நெடுந்தீவுக்கும் குறிகட்டுவானுக்கும் இடையேயான கடற்போக்குவரத்தில் ஈடுபடும் வடதாரகை படகு திருத்த வேலைகள் காரணமாக கடந்த ஒருவாரமாக சேவையில் ஈடுபடுவிதில்லை அது திருத்த வேலைகளுக்காக திருகோணமலைக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன சேவையில் ஈடுபடாத வடதாரகை படகு குறிகட்டுவான துறைமுகத்தில் அணைக்கப்ட்டுள்ளமையால் ஏனைய படகுகள் நேரடியாக துறைமுகத்தில் அணைக்க முடியாத நிலமை காணப்படுகின்றது.
வடதாரகை படகுடனே ஏனைய படகுகள் அணைக்கப்படுவதால் வடதாரகை ஊடாகவே பயணிகள் துறைமுகத்தினை அடைய வேண்டிய தேவை காணப்படுகின்றது. இதனால் வயோதிபர்கள் பெண்கள் சிறுவாகள் பொருட்கள் கொண்டு வருபவர்கள் பெரும் சிரமத்தினை ஏதிர்நோக்குகின்றார்கள்.
இது தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரை தொடர்பு கொண்ட போது தாங்கள் இன்று காலையில் கடற்படையினருக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாகவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது
இது போலவே அணலைதீவு எழுவைதீவு சேவையில் ஈடுபடும் எழுதாரகையும் நீண்ட நாட்களாக துறைமுகத்தில் தரித்திருந்து மக்களது போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது. இப்படகுகள் பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு திருத்த வேலைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது மக்கள் போக்குவரத்துக்கு இடையூறில்லாத வகையில் துறைமுகங்களில் தரித்து விடப்படவேண்டும்.