யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் மாணவர்களிடையேயான மிதமிஞ்சிய போதைப்பொருள் பாவனையால் பல மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டும் வருகின்றார்கள்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிமாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழையமாணவர் சங்கத்தின்ஒழுங்குபடுத்தலில் இணையவழியிலான கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
இன்று சனிக்கிழமை ( 01 ஒக்டோபர்) மாலை 6 மணியளவில் இடம்பெறவுள்ள இந்தக் கலந்துரையாடலை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினுடைய செயலாளரும், வைத்தியருமான கோ.ரஜீவ் தொகுத்து வழங்க, யாழ்.போதனா மருத்துவமனையின் உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் சிவதாஸ் சிறப்புரை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.