விசேட அபிவிருத்தி ஆலோசனை சந்திப்பு – வறுமை ஒழிப்பு , மற்றும்புலம் பெயர் முதலீடுகளுக்கு உதவுதல், உள்ளூர் சிறு முதலீட்டாளர்களை உருவாக்குதல் , இயற்கை உரம் ,சேதண விவசாயம் , நீருயிர் வளர்ப்பு ,வறுமை ஒழிப்பு , ஆடு கால்நடை வளர்ப்பு ,தென்னை பெருந்தோட்ட செய்கை உட்பட பல்வேறு திட்டங்கள் உடனடியாக தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சகல அனுமதிகளும் உடனடியாக வழங்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளது
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும், மட்டடக்ககளப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் விசேட அபிவிருத்தி சார்ந்த விசேட சந்திப்பு ஒன்று மட்டக்களப்பில் அவரது உத்தியோகபூர்வ அலுலகத்தில் 3 மணி நேரம் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் திரு.பா.பாலரமணன், வனஜீவராசிகள் வனபாதுகாப்பு அமைச்சின் வட மாகாண பணிப்பாளர் திரு.மா. பரமேஸ்வரன்., செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் துரைரத்தினம், ஆகியோர் உட்பட பல புத்திஜீவிகளும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர் கலந்து கொண்டு அபிவிருத்தி சார்ந்ந கருத்துக்களை தெரிவித்ததனர்.
இலக்குகளை வைத்து திட்டமிடவேண்டும் என கௌரவ பா.உ. சி.சந்திரகாந்தன் அவர்களால் வலியுறுத்தப்பட்டது.
சகாதேவன் ஆராய்ச்சி நிறுவனப் பணிப்பாளர் அவர்களும் இக்கலந்துரையாடலில் கலந்து கொண்டு சில ஆலோசனைக் கருத்துக்களை முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் அபிவிருத்தி பணியில் இணைந்து செயல்பட கௌரவ பா உ. அவர்ளால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கௌரவ இராஜாங் அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ மற்றும் கௌரவ வனஜீவராசிகள் வனப்பாதுகாப்பு அமைச்சர் C B ரத்நாயக்கா ஆகியோர் , அவர்களது பிரதிநிதிகளூடாக மேற்கொள்ளும் சிறந்த சேவைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.