ஊர்காவற்றுறை தம்பாட்டி கிராமத்திலுள்ள நண்டு பதனிடும் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலையைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இதனை அடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றான அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தொழிற்சாலையில் 70 பேர் வரையில் பணியாற்றும் நிலையில் இன்று 40 பேர் வரையில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏனையவர்களுக்கும் தம்பாட்டிக் கிராமத்தினைச் சேர்ந்த மக்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.