நெடுந்தீவு குறிகட்டுவான் மக்கள் போக்குவரத்து என்பது இதுவரை சீர் செய்யப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது. அண்மைக்காலங்களில் மக்கள் போக்குவரத்து என்பது மிக கடினமான செயலாகவே காணப்படுகின்றது.
கடற்போக்குவரத்தில் முக்கிய பொறுப்பில் விளங்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினி மற்றும் வடதாரகைப் படகுகள் பழுதடைந்த நிலையி;ல் காணப்படுகின்ற போது அதன் மாற்று வழியாக நெடுந்தாரகைப்படகிற்கான எரிபொருள் வழங்கப்பட்டு நெடுந்தாரகை சேவையில் ஈடுபட்டு வந்தது. ஆயினும் தற்போது நெடுந்தாரகைப் படகும் பழுதடைந்துள்ளது.
நெடுந்தாரகைப் படகு சேவையில் ஈடுபடாத தருணங்களில் பல.நோ.கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமானசமுத்திரா தேவபடகு சேவையில் ஈடுபட்டு வந்தது.
ஆயினும் போதிய வருமானம் இன்மையால் தொடர்ச்சியாக நாளுக்கு இரண்டு சேவைகளையும் மேற்கொள்ள முடியாத நிலமை காணப்படுவதாகவும், இதனால் பயனிகள் போக்குவரத்தினை நாளை காலை சேவைக்கு பின்னர் மேற்கொள்ள முடியாத நிலமை காணப்படுவதாக பல.நோ.கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக சேவையாற்றுவதாயின் மேலதிக செலவுகளுக்கு மானிய அடிப்படையில் உதவிகள் வழங்கப்படவேண்டும் எனவும், மனிதாபிமான அடிப்படையில் இவ் சேவையினை தாம் இதுவரை வழங்கி வந்ததாகவும் தமக்கு இச் சேவையினை வழங்குமாறு எழுத்து மூலமான ஆவணங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது, பிரதேச சபை அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக எரிபொருளினை பல.நோ.கூட்டுறவு சங்கத படகிற்கு வழங்கி சேவையினை தொடர்ந்து வழங்க ஆவண செய்ய வேண்டும் என தொலை பேசியூடாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு இன்றைய தினம் (ஜீலை 01) பிரதேச சபை தலைவர் அவர்களும் பிரதேச செயலாளர் அவர்களும் தெரிவித்துள்ளதாகவும் ஆயினும் அதற்கான சரியான பதில் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் போக்குவரத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய பொறுப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கே காணப்படுகின்றது அண்மையில் வடமாகாண ஆளுனர் தலமையில் தீவக கடற் போக்குவரத்து தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றபோது, ஆளுனர் அவர்களும் இதனை தெளிவாக குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது. வீதி அபிவிருத்தி சபைக்கு சொந்தமான படகுகள் பழுதடைகின்ற போது, பாதுகாப்பு மற்றும் செலவு விபரங்களைக் கருத்திற் கொண்டு மாற்றிடான படகினை ஒழுங்கு செய்து சேவையில் ஈடுபடுத்தல் வேண்டும் என எனவே அதற்கான செயற்பாட்டினை மிக விரைந்து செயற்படல் மிக முக்கியமாக காணப்படுகின்றது.
பொதுமக்கள் தங்கள் ;அன்றாட செயற்பாடுகளை மேற்கொள்ளவும் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளுக்கு சென்று வரவும் சரியான போக்குவரத்து ஒழுங்குகளை உரியவர்கள் பொறுப்பேற்று மேற்கொள்வது அவசியம்