செங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த அமெரிக்க போர்க்கப்பலை நெருங்கி வந்த பல தாக்குதல் ஆளில்லா விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
யெமனில் உள்ள ஹவுதி பயங்கரவாத அமைப்பே ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா குறிப்பட்டுள்ளது.
அமெரிக்க போர்க்கப்பல் செங்கடலில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஆளில்லா விமானத் தாக்குதலால் கப்பலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலில் ஹவுதி பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், சமீபத்தில் ஜப்பானிய சரக்குக் கப்பலை (Galaxy leader) ஹவுதி பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இந்நிலையில் கடத்திச்செல்லப்பட்ட கப்பலையும் அதன் பணியாளர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.