தீவகம் வடக்கு வேலணை பிரதேச செயலகத்தின் 2020ம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் சேவைகள் திணைக்களத்தின் ஊடாக பதிவு செய்யப்பட்ட விளையாட்டு இளைஞர் விளையாட்டுக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பான முறையில் குழு விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன
நடைபெற்று முடிந்த விளையாட்டுக்களில் புங்குடுதீவை சார்ந்த இளைஞர் கழகங்கள் அதிக விளையாட்டுக்களில் முன்னணி வகித்து வருகின்றார்கள் விளையாட்டுக்கள் யாவும் வேலணை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திரு.அமலஜான் அவர்களது மேற்பார்வையில் இடம் பெற்று வருகின்றது.
ஆண் பெண் இருபாலருக்குமான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப்போட்டி புங்குடுதீவ பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்றது ஆண்கள் பிரிவில் புங்குடுதீவு அம்பாள் இளைஞர் கழக்தினர் முதலாம் இடத்தினையும், நயினாதீவு மத்தி இளைஞர் அணியினர் இரண்டாம் இடத்தினையும் தனதாக்கி கொண்டனர்.
பெண்களுக்கான மென்பந்து கிறிக்கெற் சுற்றுப் போட்டியில் புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகம் முதலாம் இடத்தினையும் புங்குடுதீவு நண்பர்கள் விளையாட்டுக்கழகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்கள்
புங்குடுதீவு பாரதி விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற ஆண்களுக்கான கரப்பந்தாட்ட நிகழ்வில் வேலணை செட்டிபுலம் இளைஞர் கழகத்தினர் முதலாம் இடத்தினையும் புங்குடுதீவு சண் ஸ்ரார் இளைஞர் கழகத்தினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றனர்.
புங்குடுதீவு சண் ஸ்ரார் விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்ட போட்டியில் புங்குடுதீவு சண் ஸ்ரார் இளைஞர் கழகத்தினர் முதலாம் இடத்தினையும் புங்குடுதீவு நண்பர்கள் இளைஞர் அணியினர் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்
புங்குடுதீவு சண் ஸ்ரார் விளையாட்டுக்கழக மைதனத்தில் இடம் பெற்ற ஆண்களுக்கான கபடி சுற்றுப்போட்டியில் புங்குடுதீவு சண் ஸ்ரார் இளைஞர் அணியினர் முதல் இடத்தினையும், புங்குடுதீவு பாரதி அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்
பெண்களுக்கான கபடி சுற்றுப்போட்டியில் புங்குடுதீவு சண் ஸ்ரார் இளைஞர் கழகத்தினர் முதல் இடத்தினையும், புங்குடுதீவு நண்பர்கள் இளைஞர் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளார்கள்
பெண்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் புங்குடுதீவு சண் ஸ்ரார் இளைஞர் அணியினர் முதல் இடத்தையும் புங்குடுதீவு பாரதி இளைஞர் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.
ஆண்களுக்கான எல்லேப் போட்டியில் புங்குடுதீவு சண் ஸ்ரார் விளையாட்டுக்கழகம் முதல் இடத்தினையும், புங்குடுதீவு பாரதி விளையாட்டுக்கழகத்தினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளதுடன் பெண்களுக்கான எல்லே போட்டியில் புங்குடுதீவு கனிஸ்டா இளைஞர் அணியினர் முதல் இடத்தினையும், புங்குடுதீவு நண்பர்கள் அணியினர் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.