பொருளாதாரத்தில் நலிவுற்ற நிலையிலுள்ள நான்கு பயனாளிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா பெறுமதியான உலர்உணவு நிவாரணப்பொருட்கள் வேலணைப் பிரதேச செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டது.
வேலணை மக்கள் ஒன்றியத்தால் வேலணை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/13,J/14,J/15 ,J17 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட மற்றும் இதயசத்திர சிகிச்சைக்குட்பட்டவர்களுக்கே இந்த உலர்உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வேலணைப் பிரதேச செயலர், கிராம அலுவலர்கள் மற்றும் வேலணை மக்கள் ஒன்றிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.