வேலணை மண்கும்பான் பகுதியில் வீதியோரம் மருத்துவக் கழிவுகள் வீசப்பட்டு காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் அந்த பகுதி ஊடாக செல்லும்போது மருத்துவ கழிவு துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நடவடிக்கை காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.இவற்றை யார் இங்கு வந்து கொட்டுகிறார்கள், அல்லது அரச வைத்தியசாலை கழிவுகளா என்பது தொடர்பில் தற்பொழுது சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது.
குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் நடைப்பயிற்சி செல்லும் பொதுமக்கள், மருத்துவக் கழிவு துர்நாற்றம் வீசுவதாக கூறுகின்றனர்.
அத்துடன் இன்சுலின் மருந்துகள் ஏற்றப்பட்ட சிரிஞ்சுகள் அதிக அளவில் அந்த பகுதியில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பகுதி வேலனை பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியாகும்.
உடனடியாக பிரதேச சபை இவ்வாறான மருத்துவக் கழிவுகளை அகற்றி,இந்தப் பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டுபவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.