நெடுந்தீவு பிரதேசத்தில் மின் இயந்திரம் மூலம் 24 மணிநேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது நெடுந்தீவில் காற்று வீசும் தன்மை அதிகரித்துள்ளமையால் மின்சார இணைப்புக்கள் பாதிப்பு ஏற்படுகின்ற தன்மைகள் காணப்படுகின்றது.
இன்றைய தினம் (மே – 15) காற்றின் அதிகரித்ததன் காரணமாக சில இடங்களில் மின்சாரம் தடைப்பட்ட போதும். ஊடனடியாக இடங்களினை பார்வையிட்டு சீர்செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது.
குறிப்ப்பாக நெடுந்தீவு மேற்கு வளர்மதி சனசமுக நிலையத்திற்கு அண்மையில் தென்னை மரம் முறிந்தமையால் மேற்குப் பகுதிக்கான மின்சாம் துண்டிக்கப்பட்டுள்ளது ஆயினும் அதனது வேலைகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கொரேனா அச்சத்தின் காரணமாக நெடுந்தீவு மின்சார சபையில் குறிப்பிட்ட அளவிலான ஆளனியினரே காணப்படுவதுடன் குறிப்பா இவ்வாறான வெளி இணைப்பு வேலைகளை பார்வையிட்டு சீர் செய்வதற்கு ஒரு ஊழியர் காணப்படுகின்ற போதும் இன்றைய தினம் விரைந்து செயற்படுவதனi அவதானிக்க முடிந்துள்ளதுடன் மின்சார சபை தனது பணியினை நெடுந்தீவில் முடிந்தளவு திறம்பட மேற்கொள்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.