வடக்கு மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அலுவலகமானது ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸினால் வவுனியா நகரசபை நூலக கட்டிடத்தில் நேற்று (ஜூலை 26) காலை திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆளுநரை சந்திப்பதற்கு நீண்ட தூரம் பயணித்து யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ள நிலையில் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அலுவலகமானது அமைக்கப்பட்டுள்ளமையுடன் வாரநாட்களில் மக்கள் தமது முறைப்பாடுகளை இவ் அலுவலகத்தில் தெரிவிக்க முடியும் என்பதுடன் மாதத்தில் இரு தடவைகள் ஆளுநர் இங்கு விஐயம் மேற்கொண்டு மக்களை சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் , உள்ளூராட்சி அதிகாரிகள் , ஆளுநர் அலுவலக அதிகாரிகள் , நகரசபை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.