யாழ்ப்பாணம் முன்னாள் மாநகர மேயர் சரோஜினி யோகேஸ்வரனின் 27வது ஆண்டு நினைவு தினம் நேற்று (மே 17) அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி தலைமையில், யாழ்ப்பாணம் அலுவலகத்தில் இடம்பெற்றது.
நினைவுதின நிகழ்வில், சுடரேற்றம் மற்றும் மலர் மாலை இடும் நிகழ்வுகள் இடம்பெற்றன. 1998ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநகர வேட்பாளராக செயல்பட்டு உயிரிழந்த அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கட்சியின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.