யாழ் நகரில் வாகன நெரிசலை குறைக்கும் முகமாக பொலிஸாரினால் விசேட வேலை திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு யாழ் நகரில் பொருட்களை கொள்வனவு செய்யும் முகமாக பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுவதோடு நகரப் பகுதியில் வாகனங்களினை நிறுத்துவதனால் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மற்றும் யாழ் மாநகர சபையுடன் இணைந்து யாழ்நகரில் பிரதான வீதிகளில் வாகனங்கள் நிறுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொருள் கொள்வனவுக்கு வரும் பொதுமக்கள் வாகனங்களை நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வாகன தரிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் மாத்திரமே வாகனங்களை நிறுத்த முடியும் என ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்படுகிறது.
போக்குவரத்து பொலிஸார் நகரப் பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களினை வாகன நிறுத்துவதற்கென ஒதுக்கப்பட்ட இடத்திற்கு அனுப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.