யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்படும் குருதிதட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேசசெயலாளர் பிரிவுகள் மற்றும் 432 கிராம சேவையாளர் பிரிவுகளிலும்எதிர்காலத்தில் குருதிக்கொடை நிகழ்வுகளை ஏற்பாடு செய்வது தொடர்பாக யாழ்போதனா வைத்தியசாலை குழுவினர் சந்திப்பொன்றினை நேற்று (ஜூலை 15) மேற்கொண்டிருந்தனர்.
இச் சந்திப்பின் முதற் கட்டமாக எதிர்வரும் ஜூலை 30 கோப்பாய் பிரதேச செயலக பிரிவிலும், ஓகஸ்ட்07 தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவிலும், ஓகஸ்ட் 13 சங்கானை பிரதேச பிரிவிலும் குருதிக்கொடை நிகழ்வுகளை முன்னெடுப்பதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாகஇன்று யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன் அவர்களுடன்யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய நிபுணர்Dr.கௌரி ஜெயசிங்க, இரத்த வங்கியின் வைத்திய பொறுப்பு அதிகாரிDr.M.நந்தினி மற்றும் இரத்த வங்கியின் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்திரு.த.றவினதாஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.