வவுனியாவில் ஒரு கடற்படை லெப்டினன்ட் தர அதிகாரி காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பூனாவ பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
கொழும்பு சென்ற பணி முடித்து பேருந்தில் முகாமிற்கு திரும்பிய அதிகாரி, வாகனத்தில் இருந்து இறங்கி முகாமை நோக்கி சென்றுகொண்டிருந்த போது, நேற்று முன்தினம் இரவு (நவம்பர் 29) காட்டு யானை அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
பூனாவ கடற்படை முகாமில் பணிபுரிந்த, மத்தலான-நிட்டம்புவாவைச் சேர்ந்த இந்த லெப்டினன்ட் தர அதிகாரி யானை தாக்குதலில் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த அதிகாரியை கடற்படையினரும், உள்ளூர் மக்களும் இணைந்து வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
உயிரிழந்த அதிகாரியின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனை வவுனியா பொது வைத்தியசாலையில் நடைபெற உள்ளது. பூனாவ பொலிஸார் இச்சம்பவத்துக்கு உரிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்று முந்தினம்