ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை கண்ணகி அம்மன் துறைமுகப் பகுதியில் தரித்து நிற்கும் குருநகர் பகுதி இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் இன்று(ஜீன் 11) சுமுகமாக தீர்க்கப்பட்டது.
மேற்படி துறைதுகப் பகுதியில் தரித்து குருநகர் மீனவர்கள் மின்பிடியினை மேற்கொள்வது வழமையான செயற்பாடாகும். இதன்போது துறைமுகமூடாக பயணிக்கும் பயணிகளுக்கு இடையூறாக பயணிக்கும் பாதைகளில் மீன்பெட்டிகளை இறக்க வைத்தல் மற்றும் துறைமுகத்தில் படகுகளை நிறுத்துதல் தொடர்பாக எழுவைதீவு அனலைதீவு மக்களால் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அத்தவறினை ஏற்று மீனவர்களின் படகுகள் மற்றும் தங்கள் வாகனங்களை குருநகர் மீனவ மூத்த தலைமுறையினரால் எந்த வித இடையூறும் இன்றி சிறப்பான முறையில் இன்றுகாலை ஒழுங்குபடுத்தி அமைக்கப்பட்டது.
தொடர்ந்தும் இவ்வாறு இடையூறின்றி படகுகளை தரித்து வைக்கவும் அத்துடன் அவர்களின் வாழ்வாதார தொழில் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்குவதாகவும் அப்பகுதியூடாக பயணிப்போர் கூறியதுடன்,
மீனவர்களும் தொடர்ந்தும் இடையூறில்லாமல் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.