முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்கவுள்ள சர்வதேச பிரதிநிதி!

SUB EDITOR
1 Min Read

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் ஆக்னெஸ் காலமர்ட் (Agnès Callamard) நாட்டை வந்தடைந்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தினுடைய நேற்று (மே 16) விஜயமானது தெற்காசியாவிற்கான முதல் விஜயமாகும்.

இந்நிலையில், எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் அவர் தங்கியிருப்பார் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர்பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படரடுள்ளது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடத்திலான ஏற்பாடுகள்யாவும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை சர்வதேசஊடகவியலாளர்களும் அங்கு வருகை தந்து கண்காணிப்புகளில்ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த நிலையில் இலங்கை புலனாய்வாளர்களின் கண்காணிப்பும் தீவிரமாககாணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this Article
Exit mobile version