முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினை தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று (ஓகஸ்ட் 16) காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகள் தொடர்பில் துறைசார்ந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஆளுகைக்குட்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவித்தல், அதிலும் குறிப்பாக கொக்குளாய் நாயாறு பிரதேசத்திற்கு இடைப்பட்ட காணிகளை விடுவித்தல் தொடர்பாகவும் குருந்தூர் மலையை அண்டிய பகுதியில் காணப்படுகின்ற தொல்லியல் மற்றும் வனவள திணைக்களத்தினால் எல்லையிடப்பட்ட விவசாயிகளின் விளை நிலங்களை விடுவித்தல் தொடர்பாகவும் புதுக்குடியிருப்பு பகுதியில் வனவள திணைக்களத்தினால் எல்லைப்படுத்தப்பட்ட காணிகளை விடுவித்தல் தொடர்பிலும் விசேடமாக கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் வடமாகாண அபிவிருத்தி செயலணியின் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் திரு .இளங்கோவன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன், ஜனாதிபதி செயலகத்தின் பணிப்பாளர் திரு.பியந்தகுமார, வனவளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.பியந்த செனவீரட்ண , வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான திரு.செல்வம் அடைக்கலநாதன் ,திரு.சாள்ஸ் நிர்மலநாதன்,திரு.திலீபன் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்( நிர்வாகம் ) ,மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன்(காணி),பிரதேச செயலாளர்கள், கமநல திணைக்களத்தின் உதவியாணையாளர், மாவட்ட வனவள அதிகாரி ,மகாவலி எல் வலைய முகாமையாளர்,பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்,காணிக்கிளையின் உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்