மின் வெட்டு நேரம் மீண்டும் அதிகரிப்பு

SUB EDITOR
1 Min Read

நாளை (23) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை இயங்காமை, வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்தமை ஆகியவை இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.

Share this Article
Exit mobile version