மரத்தின் கீழ் நின்றவர்களை மின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர்உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு – ஐயங்கன்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றஇந்த சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான காளிமுத்து சரவணராஜா (வயது49) என்பவரே உயிரிழந்தார்.
இவர் முன்னாள் போராளியுமாவார்.
இதேநேரம், மகேந்திரன் பிரபாகரன் (வயது 26) என்பவரே படுகாயமடைந்தார்.
அவர், மல்லாவி ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.